மீண்டும் வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் மெஹா ஹிட் படம் - வெளியான டீஸர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அவரது சூப்பர் ஹிட் படத்தை மறு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Super Star Rajinikanth Nagma Baashha Movie Teaser

‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ‘ஆதித்ய அருணாசலம்’ என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 2020ம் ஆண்டு ரிலீசாகவுள்ளது.இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸ் சூப்பர் ஸ்டார் நடித்த சூப்பர் டூப்பர் கிளாசிக் ஹிட்டான ‘பாட்ஷா’ திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வரும் டிச.12ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமாக வரும் டிச.12ம் தேதி சில நகரங்களில் ‘பாட்ஷா’ திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளதாக சத்யா மூவிஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் ஸ்டைல் சாம்ராட்டாக திகழும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலிஷ் டானாக அசத்திய ‘பாட்ஷா’ திரைப்படம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாவது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் மெஹா ஹிட் படம் - வெளியான டீஸர் இதோ! வீடியோ