’ரஜினி 168’ படத்தில் அவருடன் மீண்டும் இணையும் நாயகி - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 10, 2019 11:47 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் முன்பு அவருடன் ஹோரோயினாக நடித்த நடிகை இணைய உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சூரி, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை மீனாவும் இப்படத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனா ரஜினியுடன் எஜமான், முத்து ஆகிய படங்களில் ஜோடியாகவும், குசேலன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
The enduring beauty #Meena joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/vq7RBpkZo9
— Sun Pictures (@sunpictures) December 10, 2019