www.garudabazaar.com

அடுத்தடுத்து சம்மருக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோ படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா புதிய படங்களின் ரிலீஸ் அறிவிப்பால்  தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. வலிமை படத்தின் வெற்றியால் திரையரங்குகளை நோக்கி மக்கள் கூட்டமும் பெரு வாரியாக வர ஆரம்பித்துள்ளது.

Summer March to September Release Tamil Movies List

மார்ச் முதல் அடுத்தடுத்து பெரிய படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளன. இதனால் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளன. மார்ச் முதல் செப்டெம்பர் வரை வரிசையாக படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

எதற்கும் துணிந்தவன்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. ET படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summer March to September Release Tamil Movies List

ராதே ஷியாம்

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 14, 2021 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷியாம்' வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது.

Summer March to September Release Tamil Movies List

மாறன் :

தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த 'மாறன்' படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் 11ம் தேதி வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

Summer March to September Release Tamil Movies List

இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

RRR

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது.

Summer March to September Release Tamil Movies List

RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம்.  இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 மார்ச் 25ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது.

மன்மதலீலை - இடியட்

வெங்கட் பிரபு இயக்கிய 'மன்மதலீலை' மற்றும் லொள்ளு சபா ராம்பாலா இயக்கிய 'இடியட்' ஆகிய இரண்டு படங்களும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகின்றன

KGF 2

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர்.

ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.

Summer March to September Release Tamil Movies List

ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 14,2022 அன்று KGF-2 வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றன.

பீஸ்ட்

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது.

டான்

டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார்.

Summer March to September Release Tamil Movies List

டான் படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை லைகா அன்று வெளியிடுவதால், 'டான்' படத்தின் ரிலீஸை மே மாதம் 13ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது.

கோப்ரா

கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதியாக மே மாதம் 26 ஆம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் அஜய் அறிவித்துள்ளார்.

விக்ரம் 

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தான அறிவிப்பு ’மார்ச் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Summer March to September Release Tamil Movies List

People looking for online information on Beast, Cobra, Don, ET, KGF Chapter 2, Maaran, Ponniyin Selvan, RRR, Vikram will find this news story useful.