www.garudabazaar.com

பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடிய நம்ம துப்பாக்கி விஜய் தங்கச்சி! செம வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகை சஞ்சனா ஆடிய நடனம் வைரலாகி உள்ளது.

Beast Arabic Kuththu Dance from Thuppaki Vijay Sister Sanjana

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 100 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

Beast Arabic Kuththu Dance from Thuppaki Vijay Sister Sanjana

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

Beast Arabic Kuththu Dance from Thuppaki Vijay Sister Sanjana

இந்த பட்டிலில் நடிகை சஞ்சனா சாரதியும் இடம் பிடித்துள்ளார். சஞ்சனா விஜய் உடன் துப்பாக்கி படத்தில் தங்கச்சியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சஞ்சனா, ஹரி பாஸ்கர் உடன் நினைவோ ஒரு பறவை படத்தில் நடித்து வருகிறார். இவர் வாலு, எனை நோக்கி பாயும் தோட்டா, வழக்கு எண்18/9, என்றென்றும் புன்னகை படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Beast Arabic Kuththu Dance from Thuppaki Vijay Sister Sanjana

People looking for online information on Arabic Kuththu, Beast, Jump Cut, Sanjana Sarathy, Thupaki, Thuppakki, Vijay will find this news story useful.