www.garudabazaar.com

பிரபல காமெடி பட இயக்குனருடன் இணைந்த விக்ரம் பிரபு... படத்துக்கு பேரு என்ன தெரியுமா? வேற லெவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு  வெளியாகி உள்ளது.

Vikram Prabhu - Shradha Srinath movie titled as Irukka Pattru

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம் பிரபு. தற்போது டாணாக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு படம் . விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கன்னட  நடிகர் தனன்ஜெயா  நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். 

Vikram Prabhu - Shradha Srinath movie titled as Irukka Pattru

அதேபோல் இயக்குநர் தமிழ் டாணாக்காரன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள 'டாணாக்காரன்' படம் சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vikram Prabhu - Shradha Srinath movie titled as Irukka Pattru

இந்நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் காமெடி பட இயக்குனர் யுவ்ராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். யுவராஜ் ஏற்கனவே பட்டாபட்டி, தெனாலிராமன், எலி படங்களை இயக்கியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் பாக்கி உள்ளதாகவும், இந்த படத்திற்கு 'இருக பற்று' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படத்தை தொடர்ந்து டைகர் படத்தில் நடிக்க உள்ளார். வெள்ளக்கார துரை' படத்தில் அழகான கெமிஸ்ட்ரி  மூலம் ரசிகர்களை கவர்ந்த்  விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா ஜோடி ‘டைகர்’ படத்தில்  மீண்டும்  இணைந்து திரையில் தோன்றவுள்ளார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Prabhu - Shradha Srinath movie titled as Irukka Pattru

People looking for online information on Vikram Prabhu will find this news story useful.