www.garudabazaar.com

அரபிக் குத்து பாடலுக்கு ஆடி அசத்திய கல்லூரி மாணவர்கள்… செம்ம மாஸ் flash mob!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிவரும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் பிப்ரவரி 14 மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

College students mass dance for Arabic kuthu song

விஜய் நெல்சன் கூட்டணி:

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில்  உருவாகிவரும் பீஸ்ட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் வசூலில் சாதனைப் படைத்தன. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குவதால் விஜய்யை வேறொரு பரிணாமத்தில் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

College students mass dance for Arabic kuthu song

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்துவருகின்றன. படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்குத்து எனும் ஹலமதி ஹபிபோ

வழக்கமாக நெல்சன் இயக்கும் எல்லா படங்களிலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதிவருகிறார். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் அவர் எழுதிய பாடல்கள் ஹிட் அடித்ததை அடுத்து பீஸ்ட் படத்திலும் அவர் ஹலமதி ஹபிபோ எனும் அரபி வரிகளைத் தாங்கிய பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் வெளியீட்டுக்கு முன்னர் சிவகார்த்திகேயன், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்ட ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஹிட்டானது.

College students mass dance for Arabic kuthu song

100 மில்லியன் கடந்த அரபிக்குத்து

பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. ரசிகர்கள் இந்த பாடலில் விஜய் ஆடும் சில நடன அசைவுகளை ஆடி அதை இன்ஸ்டா ரீல்ஸாக பதிவேற்ற ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சினிமா பிரபலங்களும் அது போல நடனவீடியோக்களை வெளியிடவே பாடல் இணையத்தில் தீயாய் பரவியது. இதுவரை யுடியூபில் 100 மில்லியன் பேருக்கு மேல் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

College students mass dance for Arabic kuthu song

கல்லூரி மாணவர்களின் மாஸ் நடனம்

இந்நிலையில் கோவையில் உள்ள SNS கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு flash mob எனப்படும் கூட்டமாக சேர்ந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

College students mass dance for Arabic kuthu song

அந்த வீடியோ பரவி வருகிறது. இதுவரை அரபிக்குத்து பாடலுக்கு பல வீடியோக்கள் வெளியாகி இருந்தாலும் இத்தனை பேர் சேர்ந்து ஆடுவது இதுவே முதல்முறை.

College students mass dance for Arabic kuthu song

தொடர்புடைய இணைப்புகள்

College students mass dance for Arabic kuthu song

People looking for online information on Arabic Kuthu, College student, Vijay will find this news story useful.