www.garudabazaar.com

இது மன்சூர் வெர்ஷன் அரபிக் குத்து .. பிரேக் டான்ஸ்லாம் இருக்கு.. கோதாவில் இறங்கி அசத்துறாரே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த திரைப்படத்தினை நெல்சன் இயக்கியுள்ளார்.

mansoor ali khan dances for arabic kuthu song from beast

நடிகர் விஜய் நடிப்பில், கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி, வேற லெவலில் ஹிட்டடித்திருந்தது. அதே போல, நெல்சன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான 'டாக்டர்' திரைப்படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

இதனால், விஜய் - நெல்சன் என இருவரும் தங்களின் வெற்றி படத்திற்கு பிறகு இணைவதால், பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், திரைப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

வைரல் 'அரபிக்குத்து'

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், VTV கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே, பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக்குத்து' என்ற பாடல், கடந்த பிப்ரவரி மாதம், 14 ஆம் தேதி வெளியாகியிருந்தது. பாடல் ரிலீசான சமயம் முதலே, பட்டித் தொட்டி எங்கும் வேற லெவலில் ஹிட்டடித்து வருகிறது. அது மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

'ஹிட்' காம்போ

அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் எழுதியிருந்த 'செல்லம்மா' என்ற பாடல், கடந்த ஆண்டு அதிக அளவில் வைரலாகி இருந்தது. அதே கூட்டணி, மீண்டும் நெல்சன் திரைப்படத்தில் இணைந்து அரபிக்குத்து பாடலை அசத்தலாக உருவாக்கியுள்ளனர்.

mansoor ali khan dances for arabic kuthu song from beast

100 மில்லியன்கள்

100 மில்லியன்களைத் தாண்டி, சக்கை போடு போட்டு வரும் அரபிக்குத்து மீது இன்னும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைப் குறையவில்லை. தொடர்ந்து, பலர் இந்த பாடலுக்கு நடனமாடி மீண்டும் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே போல, பல நாடுகளிலுள்ள ரசிகர்கள் கூட, இந்த பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.

மேலும், சில கல்லூரிகளிலும் கூட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒன்றாக இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி இருந்த வீடியோக்களும் வேற லெவலில் லைக்குகளை அள்ளி\ குவித்திருந்தது.

மன்சூர் அரபிக்குத்து

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலி கான், சென்னை மெரினா கடற்கரை பகுதியில், குழந்தைகள் மற்றும் அங்குள்ளவர்களுடன் சேர்ந்து அரபிக்குத்து பாடலுக்கு ஆடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, அதிகம் வைரலாகி வருகிறது.

அரபிக்குத்து பாடலுக்கு தன்னுடைய ஸ்டைலில், அனைத்து வடிவிலான நடன அசைவுகளையும் போட்டு, ரகளையுடன் மன்சூர்அலி கான் ஆடும் வீடியோக்கள், மீண்டும் ஒரு முறை ரசிகர்களை 'ஹலமத்தி ஹபிபோ' என முணுமுணுக்க செய்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

mansoor ali khan dances for arabic kuthu song from beast

People looking for online information on Anirudh Ravichander, Arabic Kuthu, Beast, Halamathi Habibo, Mansoor ali khan, Nelson Dilipkumar, Pooja Hegde, Sivakarthikeyan, Vijay will find this news story useful.