மணிரத்னத்துக்கு பிடிச்ச டைரக்டர் யார் தெரியுமா ? - அவரது படங்கள் எல்லாமே ரொம்ப பிடிக்குமாம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் தற்போது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்சன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

Director Mani Ratnam's Favourite director is Jallikattu fame Lijo Jose Pelliserry | ஜல்லிக்கட்டு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனக்கு மணி ரத்னம

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லாக்

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் இயக்குநர் மணிரத்னம், தனது மனைவியும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி குறித்து பேசிய மணிரத்னம், அவர் தனது விருப்பமான இயக்குநர் என்றும் அவரது படங்களான ஈமாயூ, ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரிஸ் உள்ளிட்டவை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

Entertainment sub editor