www.garudabazaar.com

ரத்தன் டாடாவின் BIOPIC திரைப்படம்?.‌. வைரலாகும் சூரரை போற்று சுதா கொங்கராவின் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.

Sudha Kongara Tweet about Ratan Tata BioPic Movie

இவர் இயக்கிய துரோகி, இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரின் மூன்றாவது படமாக சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகாமடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது

சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்திற்கு பிறகு KGF 2 மூலம் கவனம் பெற்ற ஹோம்பாலே   நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க  இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சுதா கொங்கரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "நான் திரு. ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை. ஆனால், அவரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.  எனது அடுத்த படத்தின் மீதான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!!" என சுதா கொங்கரா ட்வீட் செய்துள்ளார்.

Sudha Kongara Tweet about Ratan Tata BioPic Movie

சமீபத்தில் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sudha Kongara Tweet about Ratan Tata BioPic Movie

People looking for online information on Ratan Tata, Sudha Kongara, Tata Bio Pic will find this news story useful.