www.garudabazaar.com

'பாலா உங்களுக்கு தம்பி மாதிரியா?' என்று கேட்ட ரசிகர்... கடுப்பான சுசித்ரா அளித்த பதில் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு  வாரம் முன்பு சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியேறிய பிறகு வீட்டுக்குள் இருப்பவர்களை பற்றி கமலிடம் அவர் பகிர்ந்த விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. மிகவும் சரியாக தான் கூறுகிறார் என்பது போல் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அதை பற்றி ஒரு சில பதிவுகளை அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டார்.

suchithra shares her view about balaji and aari

இந்நிலையில் பாலாவை பற்றிய பல கேள்விகளை சுசித்ராவிடம் ரசிகர்கள் ஏவுகணைகளாக தொடுத்துள்ளனர். அவற்றுக்குப் அவரும் பொறுமையாக பதில் அளித்துள்ளார். அப்படி ரசிகர் ஒருவர் "பாலாஜி வெளியிலிருந்து பார்ப்பதற்கும் வீட்டிற்கு உள்ளே பார்ப்பதர்க்கும் என்ன வித்தியாசம்" என்று கேட்டதற்கு "அவர் அப்படியே தான் இருக்கிறார். மிகவும் கூலான ஒரு மனிதர்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் "உங்களுக்கு பாலாஜி ஒரு நல்ல நண்பரா? அல்லது சகோதரரா?" என்று கேட்பதற்கு.  "உங்களுடைய எல்லா விளக்கத்திற்கும் மேலானது அது. எதற்கு இந்த தேவையில்லாத கேள்விகள்" என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் ஒரு ரசிகரும் "பாலாஜி போல் உங்களுக்கு ஒரு நல்ல சகோதரர் கிடைத்திருக்கிறார்" என்று கூறியதற்கு. சுசித்ரா "சகோதரரா? அய்யே வேண்டவே வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

மேலும் ஆரியை பற்றி ரசிகர் ஒருவர் "நீங்கள் கமல் சாரிடம் பேசும்போது ஆரி  பற்றி மிகவும் உயர்வாக பேசினீர்கள். ஆனால் ஏன் இப்பொழுது அவருக்கு  சப்போர்ட் செய்ய மாட்றீங்க" என்று கேட்க. அதற்கு அவர் 'ஆரி என்னை காமெடி பீஸ் போல தான் பார்த்தார். நானும் அவரை அப்படித்தான் பார்க்கிறேன்" என்று கூற ரசிகர்கள் பலரும் அதற்கு கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். உடனே அவர் "இல்லை நான் காமெடி பீஸ் என்பதை ஜாலியான மனிதர் என்ற அர்த்ததில் தான் சொன்னேன்" என்று கூறியுள்ளார்.

'பாலா உங்களுக்கு தம்பி மாதிரியா?' என்று கேட்ட ரசிகர்... கடுப்பான சுசித்ரா அளித்த பதில் இதுதான்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

suchithra shares her view about balaji and aari

People looking for online information on Biggboss, Suchithra will find this news story useful.