''சிம்பு இப்படி சொன்னார் - இந்த ஃபோட்டோ என் ஃபேன்ஸ்க்கு கிடைச்சா அவ்ளோ தான்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷிபடுத்தியது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

STR's Latest Photoshoot, Photographer Karthik Srinivasan shares his experience

மேலும் ஹன்சிகாவுடன் இணைந்து மகா படத்தில் சிறப்பு வேடத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் பிரபல புகைப்படக்கலைஞர் கார்த்திக் ஸ்ரீநிவாசன் பிரபலங்களின் இடம் பெறும் காலண்டர் ஒன்றை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டுக்கான காலண்டருக்காக சிம்பு  ஃபோட்டோ ஷூட்டில் பங்கேற்றார். இந்த நிகழ்வு குறித்து கார்த்திக் ஸ்ரீநிவாசன் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். சிம்பு எனக்கு நன்றாக ஒத்துழைத்தார். நமக்கு என்ன வேண்டும் என்பதை சொன்னால் உடனே புரிந்து கொள்வார்.

படங்களில் டான்ஸ் கூட ஒருமுறை பார்த்ததும் ஆடி விடுவார். அவர் Born Star. நான் எடுத்த ஃபோட்டோ அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. என் ஃபேன்ஸ்க்கு இந்த போட்டோ கிடைச்சா அவ்ளோ தான்'' என்றார்.

''சிம்பு இப்படி சொன்னார் - இந்த ஃபோட்டோ என் ஃபேன்ஸ்க்கு கிடைச்சா அவ்ளோ தான்'' வீடியோ

Entertainment sub editor