சிம்பு பைலட்டாக மாஸ் காட்ட... வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 02, 2020 07:00 PM
நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்துக்கு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் இருந்து சிம்பு - ஹன்சிகா இணைந்திருந்த போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Tags : Str, Hansika Motwani, Maha