சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்... அவரது அம்மா ஆனந்த கண்ணீர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 23, 2019 01:27 PM
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 'மகாநடி'. தமிழில் இந்த படம் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோற்றம், நடை உடை, பாவனை என அனைத்திலும் சாவித்ரியாகவே உருமாறியிருந்தார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு விமர்சர்கர்கள், ரசிகர்கள் என ஒரு சேர வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கீர்த்தி சுரேஷிற்கு கடந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது 66வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தேசிய விருது அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பதக்கமும் சான்றிதழும் அளித்தார். அப்போது அவரது அம்மாவும் நடிகையுமான மேனகா பெருமையுடன் அந்த நிகழ்வை தனது ஃபோனில் பதிவு செய்தார்.