முக்காலா பாடலை Recreate செய்த பிரபுதேவா - Street Dancer 3டி டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 18, 2019 05:50 PM
சல்மான்கான் நடிப்பில் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'தபங் 3'. இந்த படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் பிரபு தேவா பாலிவுட்டில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் 'ஸ்ட்ரீட் டான்ஸர் 3 டி'. இந்த படத்தில் அவருடன் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெமோ டிஸோஸா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரில் காதலன் படத்தில் இடம் பெற்ற முக்காலா, முக்காபுல்லா என்ற பாடலுக்கு பிரபுதேவா புது ஸ்டைலில் புதுவிதமாக ரீ கிரியேட் செய்து நடனமாடுகிறார்.
முக்காலா பாடலை RECREATE செய்த பிரபுதேவா - STREET DANCER 3டி டிரெய்லர் இதோ வீடியோ
Tags : Street Dancer 3D, Prabhudeva, Varun Dhawan