''திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே...'' - 'கைதி' படம் குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'கைதி'. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

SR Prabhu clarifies about Actor Karthi's Kaithi issue

இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே 30 நாட்களுக்குள்  OTT எனப்படும் ஆன் லைன் தளங்களில் வெளியாவது குறித்து நிறைய கருத்துக்களை பார்க்கிறேன். இந்த டிரெண்ட் தொடர்ந்தால் திரையரங்கில் ரசிகர்கள் குறைவார்களா ? என்றால் ஆம். ஆனால் பைரஸி போன்ற விஷயங்களை இதன் மூலமே தயாரிப்பாளர்களால் சரிகட்ட முடியும்'' என்று விளக்கமளித்துள்ளார்.