திரைப்பட விநியோகிஸ்தர் சங்கத் தேர்தலில் களமிறங்கும் டி.ராஜேந்தர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 21, 2019 04:29 PM
தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் பன்முகம் கொண்டவர் டி.ராஜேந்திரன். இவரது அடுக்கு மொழி வசனங்களுக்காகவே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் புதிய அணியின் சார்பாக போட்டியட விருக்கிறார். இதில் செயலாளர் பதவிக்கு மன்னர் பிலிம்ஸ் மன்னன் போட்டியிடுகிறார்.
இந்த விநியோகிஸ்தர் சங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் உள்ளனர். டி.ராஜேந்தர் அணியின் தேர்தல் அறிக்கை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.