www.garudabazaar.com

"3 விஷயத்த நியாபகம் வெச்சுக்க" .. BiggBoss-ல் பாவனிக்கு போன் பண்ணி சுருதி கொடுத்த பலே டிப்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி, தம் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சி தன்னுடைய 98வது நாளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Sruti 3 advice to Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்

BiggBossTamil5: இந்நிலையில் முன்னாள் போட்டியாளர்கள் பலரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது இருக்கும் போட்டியாளர்களிடையே கமல்ஹாசன் போன் மூலமாக பேசவைத்தார். அப்போது ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுகுள் போட்டியாளராக இருந்த பிரபல மாடலான சுருதியும் இந்த போன் கால் மூலம் அகம் டிவிக்குள் இருந்த போட்டியாளர்களிடையே பேசுவதற்காக இணைந்தார்.

Sruti 3 advice to Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்

முன்னாள் போட்டியாளர் சுருதி 

முன்னதாக சுருதி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பாவனி மற்றும் மதுமிதா ஆகியோருடன் மிகவும் நெருக்கமான நட்புடன் பழகி வந்தார். அதன் பிறகு சுருதி எலிமினேட் ஆனார். மேலும் சுருதி வெளியேறும்போது, பாவனி மற்றும் மதுமிதா இருவரும் வெளியே வந்ததும் ஒரே பிளாட்டில் இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

Sruti 3 advice to Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்

பாவனிக்கு சுருதியின் 3 அட்வைஸ்

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாடி வரும் போட்டியாளர், பாவனியிடம் சுருதி போன் பேசும்போது ஒரு 3 விஷயத்தை, அவரிடம் கூறுவதாக தெரிவித்தார். அதில். முதாலவதாக, பாவனியிடம், ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டாக இருக வேண்டும் என்று கூறினார்.

Sruti 3 advice to Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்

இரண்டாவது பாய்ண்ட்டாக, ஒரு விஷயத்தை யாரிடமாவது சொல்லிவிட்டு, பிறகு வந்து ஓரிடத்தில் பேசவேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அந்த விஷயத்தை சொல்ல வேண்டிய கணத்திலேயே, அந்த இடத்திலேயே நின்று பேசுமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் 3-வதாக ஒரு இடத்தில் ‘நோ’ என்று சொன்னால், திரும்பவும், ‘யெஸ்’ சொல்ல வேண்டாம் என்றும், அதாவது சொன்ன கருத்தில் அல்லது முடிவில் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஓட்டு போட்ட மக்களுக்காக ஆடு

இறுதியாக, பாவனிக்கு ஒரு அட்வைஸையும் சுருதி கொடுத்திருந்தார். அதன்படி, “இதுவரை கேமை நீ எப்படி ஆடினாயோ, உனக்கு சப்போர்ட் பண்ணி உன்னை பார்வையாளர்கள் இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளாகள். அவர்களுக்காகவேணும் நீ வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.

Sruti 3 advice to Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்

மேலும் மற்ற அனைவருக்கும் வெளியே வந்த பின் வாழ்க்கை அடிபொலி என்றும் சுருதி வாழ்த்துக்கள் கூறினார். 

தொடர்புடைய இணைப்புகள்

Sruti 3 advice to Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Sruthi, Sruti, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.