www.garudabazaar.com

போட்டியாளரின் திடீர் முடிவு! பேசியே மனசை மாத்திட்டாரா அமீர்.. 'தலைவன்' நிரூப்பின் Strategy-ஆ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

Ciby sudden decision is this amir strategy biggbosstamil5

BiggBossTamil5: இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் மூன்று புரோமோக்கள் அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன. இந்த புரோமோக்கள் அனைத்துமே இப்போது இன்னும் சூடு பிடிக்கின்றன. இணைய தளத்தில் இருக்கும் அனைவரும் இதைப் பற்றியே பேசி வருகின்றனர். அதற்கு இன்னொரு காரணம், பிக்பாஸ் ஃபினாலே மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, அந்த பணப்பெட்டி தான் என்று சொல்லலாம்.

சரத்குமாரின் அறிவிப்பு

ஆம், பிக்பாஸ் வீட்டில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பணப்பெட்டியை அறிமுகப்படுத்தி பேசிய நடிகர் சரத்குமார், இந்த பணப் பெட்டியில் 3 லட்சம் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும்  இருக்கலாம், எனக்கு தெரியாது.

ஆனால் இன்றைய ஃபெனிபிட்டா அல்லது நாளைய சாதனையா என்று யோசித்து, இப்போது இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது என்கிற முடிவை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அது சரியான முடிவுதான் என்று நான் சொல்லமாட்டேன். எனினும் இறுதி நிகழ்ச்சியில் யாரேனும் ஒருவர்தான் வெற்றி பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.

பணத்தை நான் எடுத்து விடுவேன் - நிரூப்

Ciby sudden decision is this amir strategy biggbosstamil5

அதன்படி அந்த பணப்பெட்டியின் பணமதிப்பு 3 லட்ச ரூபாய் முதல் 7 லட்சம், 11 லட்சம், 12 லட்சம் என்று ஏறிக்கொண்டே செல்கிறது. இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிலர், இந்த பணப்பெட்டியில் இருக்கும் பணத்தை நான் எடுத்து விடுவேன் என்று நிரூப் சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால் ரசிகர்கள் பலரும் நிரூப் இப்படி சொல்வது ஒரு ஸ்ட்ராடஜிதான் என்று கூறினர். காரணம் இவ்வாறு சொல்வதன் மூலம் அந்த பணத்தின் மீது ஆசை இல்லாதவர்களுக்கு, ஆசை தூண்டப்பட வாய்ப்பிருப்பதாக நிரூப் கருதுகிறார் என ரசிகர்கள் கூறிவந்தனர்.

நான் ஜெயிக்க வாய்ப்பில்லை - அமீர்.

Ciby sudden decision is this amir strategy biggbosstamil5

இதனிடையே தற்போது வெளியான ஒரு புரோமோவில், அமீர் நான் டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட் வாங்கி இருக்கிறேன் என்றாலும், இறுதி போட்டியில் வெற்றி பெறாவிட்டால் என்ன ஆவது.? நான் ஜெயிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எனவே இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நான் விடை பெறுகிறேன் என்று கூறியிருந்தார். கொஞ்ச நேரத்தில் சிபி அவரை கட்டிப்பிடித்து தோளைத்தட்டி, நீ எடுத்தது சரியான முடிவு என்று வாழ்த்தினார்.

அமீர் அடித்த அந்தர் பல்டி

ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அமீர் இதெல்லாம் நான் விளையாட்டுக்காக சொன்னேன்.. பிராங்.க்.. என்று கூறினார். அப்போது பிரியங்கா மற்றும் சிபி இருவரும் சேர்ந்து அதற்காக என்ன, நீ எடுத்தது நல்ல முடிவுதான் என்று கூறினர். எனினும் அவர்கள் இந்த முடிவை எடுக்க போவதில்லை என்பது போல் பேசினார்கள். ஆனால் அமீரோ, முதல் நாள் இரவே, தான் தாமரையிடம் இந்த பிராங்க் பற்றி கூறிக் கொண்டு இருந்ததாக குறிப்பிட்டார்.

மழையும், புயலும் ஒண்ணு சேந்துருச்சு டோய்.. உதயநிதி ரசிகர்களுக்கு செம 'ட்ரீட்' இருக்கு!!

Ciby sudden decision is this amir strategy biggbosstamil5

அதன் பின்னர் இதனை தொடர்ந்து வெளியான மற்றொரு புரோமோவில் இந்த பணத்தை யாரும் எடுக்க மாட்டீர்கள் அப்படித்தானே, அப்படி என்றால் நான் எடுத்துக் கொள்கிறேன். எப்படியும் யாராவது ஒருவர்தான் இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் கண்டிப்பாக, அது நான் இல்லை என கருதுகிறேன். இந்த பணத்தை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பேசுகிறார்.  இதனால், அமீர் இவ்வாறு பேசியதால் சிபி இப்படி மனம் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

மனம் மாறிய சிபி.. அமீரின் ஸ்ட்ராட்டஜியா?

Ciby sudden decision is this amir strategy biggbosstamil5

இன்னும் சிலர் நிரூப் போலவே அமீர் இந்த ஸ்ட்ராட்டஜியை கையாண்டிருக்கிறார் என்று கூறி வருகின்றனர். அதாவது இந்த பணத்தை எடுத்துக் கொள்ளும் ஆசை இருப்பது போல் பேசினால், சிலருக்கு அந்த ஆசை தூண்டப்படும், அதுதான் இதன் பின்னணியில் இருக்கும் ஸ்ட்ராட்டஜி என்றும், இதனால் சிபிக்கு இப்படி ஒரு ஆசை வந்ததோ? என்றும் பேசி வருகின்றனர். கடந்த வாரங்களில் அமீர் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இப்படியான புரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! காரணம் என்ன? முழு தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ciby sudden decision is this amir strategy biggbosstamil5

People looking for online information on Amir, BiggBoss5, BiggBossTamil5, Niroop will find this news story useful.