சூப்பர் ஸ்டாருக்கு தமிழில் வாழ்த்து கூறிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் - வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் வாழ்த்து பதிவுகளால் சமூக வலைதளங்கள் நிரம்பியுள்ளது.

Srilanka Cricketer Russel Arnold wishes Superstar Rajinikanth

அதன் ஒரு பகுதியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்குகளை பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இலங்கையிலும் நிறைய ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்தார். இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.