சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அறிவிப்பை வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 12, 2019 01:24 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12) பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அப்பாவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக மே6 எண்டர்டெயின்மென்ட் வெப்சைட் செயல்பாட்டை தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் நாவலை அனிமேஷன் இணைய தொடராக தனது மே 6 எண்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எக்ஸ் பிளேயருடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.