சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் இரண்டாவது டெலீட்டட் சீன் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 22, 2019 06:36 PM
’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'ஹீரோ'. சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் இதை ’இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கி உள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான (20.12.2019) ‘ஹீரோ’ திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இருந்து ஏற்கெனவே ஒரு டெலீட்டட் சீன் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது டெலீட்டட் சீன் நேற்று வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் இரண்டாவது டெலீட்டட் சீன் இதோ வீடியோ
Tags : Sivakarthikeyan, P S Mithran, Hero Tamil