'ஹீரோ' மற்றும் 'தம்பி' படங்களின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படமும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்த 'தம்பி' திரைப்படமும் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sivakarthikeyan's Hero and Karthi's Thambi box Office collection Details

இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி தமிழக கல்லூரிகளுக்கு ஜனவரி 1 வரை விடுப்பு அறிவிக்கப்பட்டது. இது இரண்டு படங்களுக்கும் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான முதல் 3 நாட்களில் கார்த்தி - ஜோதிகாவின் 'தம்பி' திரைப்படம் 5.40 கோடி ரூபாயும், சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' திரைப்படம் 10.30 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

Entertainment sub editor