www.garudabazaar.com

நியூ இயர் வேறமாரி இருக்க போகுது.. மாஸ் நடிகர்களின் டபுள் தமாகா திரைப்படங்களின் முழு லிஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புது வருஷம் என்றாலே, அனைவருக்கும் ஒரு தனி சந்தோஷம் தான். எந்த நல்ல நாட்களாக இருந்தாலும் அதனை முழுமையாக்குவது சினிமா மட்டும் தான். அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

அடித்துப் பிடித்து கொண்டு முதல் நாள் முதல் ஷோ என்று பார்க்கும் ரசிகர்கள் பல பேர் உண்டு. அந்த வரிசையில், வரும் ஆண்டை மிகவும் அழகாக்க பல திரைப்படங்கள் வெளிவர காத்துகொண்டு இருக்கின்றன. அதுவும் ஒரு படம் அல்ல. ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் இரண்டு படங்கள் டபுள் தமாகாவாக வெளிவர காத்துகொண்டு இருக்கின்றது. அந்த படங்களின் முழு லிஸ்டை இந்த பதிவில் பாப்போம்.

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

நம் வரிசையில் முதலில் நிற்பது அஜித் படமான வலிமை. நீண்ட மாதங்களாக ரசிகர்களின் மனதில் பல கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும், கொண்டுள்ள படம்தான் வலிமை. அஜித் மற்றும் ஹூமா குரேஷி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இந்த படத்தின் அனைத்து அப்டேட்டுகளும் ஹிட் கொடுத்த நிலையில் படத்தின் ரிலீசுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள். அஜித்தின் அடுத்தப்படமான அஜித்61 படமும் 2022-ல் வெளிவரும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

அடுத்து, தளபதி படமான பீஸ்ட் மற்றும் தளபதி66 படமும் வரும் ஆண்டு வெளிவர உள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இப்படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார். இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா,டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மற்றும் பாலாவுடன் சூர்யா இணையும் படமும் 2022-இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சூர்யாவின் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இணைந்தால் எப்போதும் ஹிட் தான் என்பதால், இந்த படங்கள் சூர்யாவுக்கு பிளாக் பஸ்டராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். 

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

அடுத்து தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களும், சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களும், சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் போன்ற படங்கள் வரிசையாக வெளிவர காத்துகொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Special 2022 in Kollywood. Double dhamaka for all big heroes

People looking for online information on Ajith61, Ayalaan, Beast, Don, Maaran, PathuThala, Thalapathy66, Thiruchitrambalam, Valimai, VendhuThanindhathuKaadu will find this news story useful.