www.garudabazaar.com

VERA LEVEL BREAKING: சிம்பு பட தயாரிப்பாளருடன் முதல்முறையாக புதிய படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம்.

Madonne Ashwin is directing next with Sivakarthikeyan

டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நாளை இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது. 

Madonne Ashwin is directing next with Sivakarthikeyan

இதனை அடுத்து சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ்-சேகர் கம்முலா படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் எல்.எல்.பி. நிறுவனமே இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு  டிசம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madonne Ashwin is directing next with Sivakarthikeyan

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த படத்தை தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வரும் VELS INTERNATIONAL நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madonne Ashwin is directing next with Sivakarthikeyan

தொடர்புடைய இணைப்புகள்

Madonne Ashwin is directing next with Sivakarthikeyan

People looking for online information on சிவகார்த்திகேயனின் அடுத்த படம், சிவகார்த்திகேயன், Madonne Ashwin, Mandela, Siva Karthikeyan, SK, Vels will find this news story useful.