Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

பீஸ்ட் பட ஷூட்டிங் நிறைவு! சன் பிக்சர்ஸ் பகிர்ந்த நடிகர் விஜய் - நெல்சன் இருக்கும் Class ஆன BTS Image!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

actor vijay last day of shoot for Beast shoot wrap

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அன்பறிவ் சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். ஜானி மாஸ்டர் நடனப் பயிற்சி அளித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது.

actor vijay last day of shoot for Beast shoot wrap

இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4-கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன. கடந்த வாரம், பீஸ்ட் டீம் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சன்பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் போது எடுத்த விஜய் - நெல்சன் ஆரத்தழுவும் புகைப்படத்தை பகிர்ந்து Beast Shoot Wrap என கூறியுள்ளனர்.

actor vijay last day of shoot for Beast shoot wrap

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor vijay last day of shoot for Beast shoot wrap

People looking for online information on விஜய், Beast, Nelson, Vijay will find this news story useful.