www.garudabazaar.com

மிரட்டலான உச்சக்கட்ட 'வலிமை' பட பைக் ஸ்டண்ட்! திடிரென வைரலாகும் புதிய BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் அஜித்குமார் நடித்த 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Ajith Kumar Valimai Movie BTS Images Went Viral on Social Media

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

Ajith Kumar Valimai Movie BTS Images Went Viral on Social Media

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக மதுரை பகுதிகளில் தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். இந்நிலையில் வலிமை படத்தின் பைக் சண்டைக்காட்சிகளின் BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வாகனத்தை வில்லன் கும்பல் தாக்கும் காட்சியின் BTS புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை வலிமை படத்தின் சண்டைப்பயிற்சி கலைஞரான கணேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Ajith Kumar Valimai Movie BTS Images Went Viral on Social Media

Ajith Kumar Valimai Movie BTS Images Went Viral on Social Media

Ajith Kumar Valimai Movie BTS Images Went Viral on Social Media

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie BTS Images Went Viral on Social Media

People looking for online information on Ajith Kumar, அஜித், திருவள்ளூர் போலிஸ், திலிப் சுப்பராயன், பைக், பைக் சண்டை, வலிமை, வலிமை இண்டர்வெல், Bike Stunt, H Vinoth, Nirav shah, Valimai will find this news story useful.