www.garudabazaar.com

அட்ரா சக்க! 'டான்' படத்தின் முக்கிய உரிமையை வாங்கிய உலகின் முன்னணி நிறுவனம்! செம மாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'.

Sivakarthikeyan Don Movie Musical Rights Bagged by Sony Music

சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள்  ‘டான்’ படத்தில்  இணைந்து நடித்துள்ளனர். கடந்த (10.12.2021) அன்று இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு டிவிட்டரில் அறிவித்தது.

Sivakarthikeyan Don Movie Musical Rights Bagged by Sony Music

இந்த படத்தின் Motion Poster, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைததார். இந்நிலையில் டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படத்தி முதல் சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று (15.12.2021) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Sivakarthikeyan Don Movie Musical Rights Bagged by Sony Music

சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions  சார்பில்,  SK Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), கே.எம்.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டுனெ ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J - AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

 

மேலும் செய்திகள்

Sivakarthikeyan Don Movie Musical Rights Bagged by Sony Music

People looking for online information on Anirudh, அனிருத், சிவகார்த்திகேயன், சோனி, சோனி மியூசிக், டான், டான் மியூசிக், டான் ரிலிஸ், டான் ரிலீஸ், ரிலீஸ், Don, Don Release Date, Priyanka Mohan, Sivakarthikeyan, SK will find this news story useful.