www.garudabazaar.com
iTechUS

VIDEO: பிரபல கோயிலில் குடும்பத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. கடலில் தீர்த்தமாடி சாமி தரிசனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்துடன் பிரபல கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Soundarya Rajinikanth Visit Tiruchendur Temple with Family

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியரின் மகளும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் சகோதரியுமானவர் இயக்குனர் சௌந்தர்யா.

இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்னும் 3 டி அனிமேஷன் திரைப்படத்தையும், நடிகர் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கி இருந்தார்.

Soundarya Rajinikanth Visit Tiruchendur Temple with Family

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் சௌந்தர்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டினார்.

இந்நிலையில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவர் விஷாகன் & வேத் (முதல் குழந்தை) உடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கடலும் நள தீர்த்தத்திலும் நீராடி பின் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.  சண்முகர், சூரசம்ஹாரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட  சன்னதிகளுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். கோவில் யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கினார்.

Soundarya Rajinikanth Visit Tiruchendur Temple with Family

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் பணிகளில் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEO: பிரபல கோயிலில் குடும்பத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. கடலில் தீர்த்தமாடி சாமி தரிசனம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Soundarya Rajinikanth Visit Tiruchendur Temple with Family

People looking for online information on Murugan Temple, Soundarya rajinikanth will find this news story useful.