"எல்லா சரி ஆகிடும்.. மோசமான நாட்களையே பார்த்தாச்சு".. நடிகை சமந்தாவின் எமோஷனல் பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம் உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.
இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.
சமந்தா, தெலுங்கில் 'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "ஆழ்ந்த மூச்சு விடு பாப்பா. விரைவில் சரியாகிவிடும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த 7-8 மாதங்களில் நீ மிகவும் மோசமான நாட்களைப் பார்த்துவிட்டாய், அவற்றை எல்லாம் கடந்துவிட்டாய். அதை மறக்கவே கூடாது. நீ அவற்றை எவ்வாறு கடந்து வந்தாய் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
யோசிப்பதை நிறுத்தி, கவனத்தை சிதறடித்து, ஒரு அடியை மற்றொன்றுக்கு முன்னால் வைத்து நடந்தாய்... வேலை முடிந்தது. நீ அதை எப்படி செய்தாய் என்பது நம்பமுடியாதது. நீ அதை எப்படி தொடர்ந்து செய்தாய் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் உன்னைப் பற்றி நீ பெருமைப்பட வேண்டும். நீ வலிமையானவள்." என சமந்தா பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijay Deverakonda Samantha Ruth Prabhu About Kushi Movie
- Samantha Keerthy Suresh Wishes Atlee Priya For Baby Birth
- KL Rahul Athiya Shetty Wedding Pics Samantha Congratulates
- Samantha Ruth Prabhu Latest Gym Workout Session
- Keerthy Suresh Next Revolver Rita, Samantha Releases First Look
- Atlee Priya Pregnancy Photoshoot Video Samantha Comment
- Samantha Cried And Emotional In Shaakuntalam Movie Event
- Samantha Ruth Prabhu Instagram Post About Shakuntalam
- Samantha Started Shaakunthalam Movie Dubbing
- Samantha Shaakunthalam Movie Release Date Announced
- Samantha Ruth Prabhu New Year 2023 Wishes To Fans
- Yashoda To Stream In OTT From Dec 9 Starring Samantha
தொடர்புடைய இணைப்புகள்
- சீக்கிரம் வந்துடறேன், கொஞ்சம் பொறுத்துக்கோங்க... Vijay Devarakonda Fans-கிட்ட Sorry கேட்ட Samantha
- Oo Solriya Mama In 10X HEAT🔥😱 Andrea's Hypnotic Voice!😍Audience Spellbound😲தெறி Live Performance😘
- Fitness கூட போட்டி போடும் Samantha😍...Wait பண்ணுங்க Workout பண்ணிட்டு வந்துடறேன்😍
- Samantha & I Had The Best Love Stories Ever👍 - Naga Chaitanya
- "சினிமா என்னை நேசிக்கிறது..நான் சினிமாவை நேசிக்கிறேன்"🥺Trailer விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா!..
- കണ്ണനെ Video-ൽ കാണിക്കാൻ ആദ്യം പേടിയായിരുന്നു | Inspiring Story
- കണ്ണനെ വച്ച് Cash ഉണ്ടാക്കുന്നു എന്ന് പറഞ്ഞവർ തന്നെ അവനോട് വന്ന് മാപ്പ് പറഞ്ഞു | Inspiring Story
- Samantha-வ யாராலும் தடுக்க முடியாது 🔥 Yashoda Making Video 👊🏽 BTS
- "അന്ന് Pocket Money മൊത്തം Munch വാങ്ങി കഴിക്കാൻ എടുക്കും" 😅😅 | Samantha Shares Childhood Memories
- ദിവസവും എനിക്ക് Munch കഴിക്കണം😍😍 | തൻ്റെ കുട്ടികാലത്തെ ഓർമ്മകൾ പങ്കുവച്ച് Samantha
- നടി സമാന്തയ്ക്ക് വന്ന Myositis അപകടകാരിയോ ?😲😲 അത് എത്രത്തോളം നമ്മുടെ Health-നെ ബാധിക്കും ?
- 'சமந்தாவை பாதித்த Myositis..!'அந்த அரிய நோயின் அறிகுறிகள் என்ன.?முன்கூட்டியே கண்டறிவது எப்படி?