www.garudabazaar.com
iTechUS

பழனி முருகன் கோயிலில் தனது அம்மாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலா பால்.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலாபால், தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Amala Paul Visit Palani Murugan Temple

                                              Image Credit : Amala Paul Instagram

Also Read | 'AK62' படத்தின் லேட்டஸ்ட்டா வந்த அப்டேட்.. டிவிட்டரில் லைக் செய்த விக்னேஷ் சிவன்! செம வைரல்

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார். அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver, டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.

Amala Paul Visit Palani Murugan Temple

Image Credit : Amala Paul Instagram

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார்.

நடிகை அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.  சமீபத்தில் அமலாபால்  தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள டவர் பாலத்தில் நின்று விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Amala Paul Visit Palani Murugan Temple

Image Credit : Amala Paul Instagram

நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன்  'ஆடுஜீவிதம்', மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Amala Paul Visit Palani Murugan Temple

Image Credit : Amala Paul Instagram

இந்நிலையில் நடிகை அமலாபால், தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பழனி முருகனை வழிபட்ட பிறகு கோயில் வளாகத்தில் அமலாபால் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் பகிர்ந்துள்ளார்.

Also Read | வீட்ல விஷேசம்.. ஆனந்த கண்ணீரில் நடிகை பூஜா ஹெக்டே! அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul Visit Palani Murugan Temple

People looking for online information on Amala Paul, Amala Paul Visit Palani Murugan, Palani Murugan Temple will find this news story useful.