எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கருடன் எழுந்த காதல் சர்ச்சைகளுக்கு பதில் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான 'மான்ஸ்டர்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

SJ Suryah reacts his Love Proposal to Priya Bhavani Shankar news

இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வரும் படம் 'பொம்மை'. இந்த படத்தை பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா தனது ஏஞ்சல் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா , பிரியா பவானி ஷங்கருடன் தான் இருக்கும் 'பொம்மை' பட ஸ்டில்லை பகிர்ந்து, பிரியா பவானி ஷங்கர் கொஞ்சம் த்ரிஷா மாதிரியும், கொஞ்சம் சிம்ரன் மாதிரியும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது.

இதனையடுத்து தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சில முட்டாள்கள் நான் பிரியா பவானி ஷங்கரிடம் காதல் சொன்னதாகவும் அதனை அவர் நிராகரித்ததாகவும் தவறான செய்தி பரப்புகிறார்கள். மான்ஸ்டர் படத்தில் இருந்து அவர் எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட அவ்வளவு தான். தவறான செய்திகளை பரப்பாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor