ஹரிஷ் கல்யாணுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரியா பவானி ஷங்கர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 31, 2019 08:01 PM
ஹிரிஷ் கல்யாண் நடித்த 'தனுசு ராசி நேயர்களே' திரைப்படம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனையடுத்து ஹரிஷ் கல்யாண், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு' பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார். கிருஷ்ணன் வசந்த் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 31 ) பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா (Koneru Satyanarayana) தெரிவித்ததாவது, ''உணவு, காதல், பொழுதுபோக்கு என கலவையாக இந்த படம் உருவாகி வருகிறது. இன்று பிரியா பவானி ஷங்கர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். நான் தயாரிப்பாளராக பணிபுரிந்த வரை, பிரியா, தனது பணிகளை கச்சிதமாக செய்யக் கூடியவர். மேலும், தன் பணிகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பார்.
ஒரிஜினல் வெர்ஷனலில் இருந்து வேறுபட்டு தெரிய, தனது வேடத்துக்கு புதுமையான ஷேட் கொடுத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் படத்தில் கலர் ஃபுல்லாக இருப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் டீஸன்டான எண்டர்டெயினராக இருக்கும்'' என்றார்.