www.garudabazaar.com

ராகவா லாரன்ஸூக்கு வில்லனாக S.J. சூர்யா?.. அதுவும் இந்த படத்துலயா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் எஸ் ஜே சூர்யா, நடிகர் ராகவா லாரன்ஸூக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக பிரத்யேக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sj Suryah Doing Negative Role in Jigarthanda 2

Also Read | BREAKING: கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா - 2.. படத்தின் தாறுமாறான அப்டேட்!

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.   ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா இந்த படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெற்றார்.

Sj Suryah Doing Negative Role in Jigarthanda 2

இந்தப் படம் வெளியாகி  8வது ஆண்டு விழாவை முன்னிட்டு  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும்,  அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Sj Suryah Doing Negative Role in Jigarthanda 2

இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sj Suryah Doing Negative Role in Jigarthanda 2

எஸ். ஜே. சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஷங்கர் & ராம் சரண் இணையும் RC15 படத்திலும், விஜய் நடிக்கும் 'வாரிசு'படத்திலும், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் எஸ். ஜே. சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஜிகர்தண்டா - 2 படத்தில் இணையும் பிரபல முன்னணி மலையாள நடிகை? செம்ம COMBO!

தொடர்புடைய இணைப்புகள்

Sj Suryah Doing Negative Role in Jigarthanda 2

People looking for online information on Jigarthanda 2, Jigarthanda 2 Movie Update, Karthik Subburaj, Nimisha Sajayan, Sj suryah will find this news story useful.