‘அப்பா பர்த்டேவில் அவர் ஆசிர்வாதத்துடன் இந்த அறிவிப்பு’ - சிவகார்த்திகேயன் பட டைட்டில் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷனின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Sivakarthikeyan's third production titled as Vaazhl, directed by Aruvi director Arun Prabhu

அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லக்ஷ்மி கோபாலசுவாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

‘அருவி’ படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘வாழ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தனது தந்தையின் பிறந்தநாளான இன்று, அவரது ஆசிர்வாதத்துடன் இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதாகவும், முந்தைய படங்களை போல இந்த படத்திற்கும் தங்களது அன்பும், ஆதரவையும் அளிக்கும்படி சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.