Fakir Other Banner USA

பறவை, பட்டாம்பூச்சி, டைனோசர்... - சிவகார்த்திகேயன் படத்தின் கதை குறித்து விக்னேஷ் சிவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vignesh Shivn Locked the scripts and dialogues for Sivakarthikeyan's SK17

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK17 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன் முறையாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

மிகுந்த பொருட் செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஸ்கிர்ப்ட் மற்றும் வசனம் எழுதும் பணிகள் நிறைவடைந்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது இன்ஸ்டா பதிவில், ‘ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது சிரமம் என்பதை உணர்கிறேன். அனைத்து படங்களுமே இயக்குநரின் மனதிற்கு நெருக்கமான படம் தான். ஆனால்  SK17 என் மனதை திறந்து வைத்த படம்’.

‘இந்த கதை எழுத பல இடங்களுக்கு பயணம் செய்தேன், புதுபுது அனுபவங்கள், வித்தியாசமான சிந்தனைகளும், எனது கற்பனையும் சேர்ந்து கதையாகியிருக்கிறது. இந்த பயணம் எனது வாழ்வில் நல்ல மறக்கமுடியாத நினைவுகளை கொடுத்திருக்கிறது. ஆனால், என்ன இதனை முடிக்க தான் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது. இருந்தாலும் பரவாயில்லை. SK17 ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது விரைவில் எனது டீமுடன் ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாகும்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் எனவும், 2020-ல் திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், திரைப்படத்திற்காக இணைந்துள்ள இவர்களது கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#SK17 screenplay & dialogues locked 🥳😌😇 Have always felt that film scripts are like birds 🐦 .. they have to be left freely so that they can fly & reach unknown boundaries too ... but later have realised that few scripts are like birds 🐦 , a few are like butterflies 🦋 & a few are like dinosaurs 🦖 better to get them locked so that they can be kept in control 😌 and don’t do much damage later ! 😅😌😬 This one joins the latter category.. !!😉 All scripts are close to your heart... this one jus opened my heart 💓 ! Made me feel creatively alive , made me emote & think a lot of how scenarios in life can become in unbelievable yet possible situations ... so the decision to travel and write this down in a few days was the plan .. but the time it has taken 😌😟😨🙄 😬 LoL ... unexpected but should admit it was the best few days of my life :)) starting from Cannes crossed many countries in these few days :) Traveled in almost all possible means of transport .. 🚢 🚞 🚗 🚲 🏍 ✈️ 🚕 🚁 Accompanied by nature , its’ unimaginable patterns that accentuate ur brain & heart sooo much , (one must travel to believe this ...) so many sunrises 🌅, sunsets .. waves , breeze .. different faces ... smell ... music .. different languages , culture .. sooo many unseen colours , unknown tastes , unique art & imaginations ... things that happen everyday .. but to give the attention they all deserve , to see the right things - at the right the time , from the right place makes all the difference ! After all .., Life is all about collecting good memories & gathering nice experiences .. with that idea .. my intention is fulfilled & my expedition comes to a pause now :) As I am fully in love wit this particular story am all upbeat about , am all geared , loaded & ready to shoot #SK17 very soon with my beloved team , all the experiences & positivity gathered from around the world 🌍 Entering Chennai happily to plunge into a #BeastWorkMode 🥳🤩😇 Cheers to #paris #Cannes #Nice #Montecarlo #cologne #dusseldorf #Athens #santorini #Mykonos #istanbul #dubai 🌍 My team 🖊✍🏻 @gnd_shyam @gautamgangadharan @senthillk7 😇👍🏽🎉

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on