சிவகார்த்திகேயனின் 'அயலான்' டைரக்டர் ரவிக்குமார் - ''மிஷ்கின் நான் நினைத்த மாதிரி இல்ல...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இன்று நேற்று நாளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 'அயலான்' படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடிப்படையாக வைத்து வேற்று கிரக வாசியை பற்றிய படம் என்று கூறப்படுகிறது.

மிஷ்கின் குறித்து சிவகார்த்திகேயனின் அயலான் டைரக்டர் ரவிக்குமார் கருத்து தெரிவித்தார் | Sivaka

இந்நிலையில் இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மிஷ்கின் உடனான சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''மிஷ்கின் சாரை 99kmகாபி கடையில் சந்தித்து பேசினேன். முதல் சந்திப்பு. ரொம்பவும் கறார் தன்மையில் இருப்பவர் என்று நினைத்திருந்தேன். அப்படியில்லை

அவ்வளவு இனிமையான மனிதர் அக்கறையான விசாரிப்பு. மனதுக்கு நெகிழ்ச்சியான சந்திப்பு. நறுமுகைக்கு அவர் கொடுத்த பிறந்த நாள் பரிசு'' இவ்வாறு குறிப்பிட்டு மிஷ்கினுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

'அயலான்' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, இஷா கோபிகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.

Entertainment sub editor