#BREAKING : கார்த்தியின் கைதிக்கு பிறகு சூர்யாவின் சூரரைப் போற்று..! - படக்குழுவின் செம ப்ளான் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்வது பற்றி தகவல் தெரியவந்துள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று ஹிந்தி ரிமேக் | Suriya's soorarai pottru remake in hindi

சூர்யாவின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி கதாநாயகியாகவும், மோகன் பாபு, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். ஜிவி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் வெய்யோன்சில்லி பாடல் அண்மையில் வெளியாக ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்வது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹிந்தியில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்ப தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Entertainment sub editor