“வேற Heroes கூட சேர்ந்து நடிப்பீங்களா…” 'தி லெஜண்ட்' பட விழாவில் சரவணன் மாஸ் பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் நேற்று (மே 29) வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

saravanan mass speech The legend movie audio launch

Also Read | Walking Stick உதவியுடன் நடந்த திவ்ய தர்ஷினி… ஆனா அதே எனர்ஜி… கவனம் ஈர்த்த வீடியோ

தி லெஜண்ட்…

நடிகர் சரவணன் கதாநாயகனாக அடியெடுத்து அறிமுகமாகும் ’தி லெஜண்ட்’படத்தை  ஜேடி –ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கியுள்ளன. படத்தின் முன்னோட்டமாக சில போஸ்டர்களும் மோஷன் போஸ்டர்களும் மற்றும் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றன.

saravanan mass speech The legend movie audio launch

ஆடியோ & பாடல்கள்…

இந்நிலையில் நேற்று படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. விழாவில் பேசிய நடிகர் சரவணன் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் “மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேட்ட போது “நடிச்சா சிங்கிள்தான்” என கூறியுள்ளார். மேலும் அவர் மேலும் வரும் விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது “அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறினார். மேலும் ‘படத்துக்கு இவ்ளோ பிரம்மாண்டம் ஏன்’ எனக் கேட்டபோது “வெற்றிக்காகதான்” என்று கூறினார்.

saravanan mass speech The legend movie audio launch

பிரம்மாண்ட நிகழ்வு…

முன்னதாக நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ராய்லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர். விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர். பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

saravanan mass speech The legend movie audio launch

Also Read | ‘ஜானி ஜானி எஸ் பாப்பா… புதுசா இப்ப ஒரு பாப்பா’… ‘வீட்ல விசேஷம்’ ஜாலியான Daddy பாட்டு

saravanan mass speech The legend movie audio launch

People looking for online information on Saravanan mass speech, The Legend movie, The legend movie audio launch will find this news story useful.