நடிகர் சங்கம் தேர்தல் வழக்கு : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 29, 2019 06:12 PM
நடிகர் சங்கம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர், கல்வியாளர் ஐசரி கணேஷுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிய விஷாலின் வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க கூடாது என சங்கரதாஸ் சுவாமிகள் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் வழக்கு விசாரிக்கும் நீதிபதையை அணுகியுள்ளனர்.
இது தொடர்பாக ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை 2 வாரங்களில் செலுத்த உத்தரவிட்டு இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.