சிவகார்த்திகேயன் படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் மீரா மிதுன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்து வந்தவர் மீரா மிதுன். குறிப்பாக சேரன் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Bigg Boss Meera Mitun to act In Sivakarthikeyan's Namma Veetu Pillai

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீரா மிதுன் வெளியேறினார். பிறகு அவரை பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி பரபரப்பாகி வந்தன. இந்நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். 

அதில், உங்கள் வாழ்த்துக்களுடன் #நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். சன் பிக்சர்ஸ் தயார்ககும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.