www.garudabazaar.com

GP Muthu : "தட்டிக்கேக்குற பொறுப்புல இருக்கீங்க தலைவரே..?" - GP முத்து -க்கு Bigg Boss பரபரப்பு அட்வைஸ்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Advise to GP Muthu ஜிபி முத்துக்கு பிக்பாஸ் அட்வைஸ்

Also Read | Bigg boss 6 tamil : பேசப் பேச அடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸின் விறுவிறு கதை சொல்லும் Task-ல் நடப்பது என்ன?

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Bigg Boss Advise to GP Muthu ஜிபி முத்துக்கு பிக்பாஸ் அட்வைஸ்

இதில் கவனிக்கத்தக்க போட்டியாளராக மாறி இருக்கிறார் ஜிபி முத்து. முன்னதாக முதல் நாள் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். பின்ன ஜிபி முத்து மழையில் ஆடினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்தபோதும் கூட, மற்ற அணிகளுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என அடம் பிடித்து அனைவருடனும் பழகினார். இருப்பினும் தனலட்சுமி, தான் கோபமாக பேசியதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொண்டதை குறிப்பிட்டு கடந்தவாரம் அழவும் செய்தார்.

Bigg Boss Advise to GP Muthu ஜிபி முத்துக்கு பிக்பாஸ் அட்வைஸ்

இதனை தொடர்ந்து தற்போது வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை இந்த கமல்ஹாசன், ஜிபி முத்துவிடம் பாதாம் கொடுத்து அது என்ன என்று கேட்க, ஜிபி முத்து பாதாம் என்று சொல்ல, இது தெரிகிறது .. ஆதாம் தெரியவில்லையா? என கிண்டல் அடித்தார். அப்போதும், ஆதாம் எங்கே இருக்கிறார்? என்று வெள்ளந்தியாக ஜிபி முத்து கேட்டிருந்தார். அப்படிப்பட்ட மனிதர் ஜிபி முத்துவை தனக்கு பிடிக்கும் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார். இந்த எபிசோடில் ஹீரோயின்கள் 2 பேர், தன்னுடன் நாயகிகளாக நடிக்க வேண்டும் என்றால், நயன்தாரா மற்றும் சிம்ரன் என்று ஜிபி முத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் ஜிபி பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர். கைப்பிடிகள் கொண்ட கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரை எந்த போட்டியாளர் கீழே விழாமலோ அல்லது இறங்காமலோ அதனை பிடித்தபடி இருக்கிறாரோ அவரே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக சாந்தி கீழே இறங்க, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர், தாக்குப்பிடித்தனர். இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனானார்.

Bigg Boss Advise to GP Muthu ஜிபி முத்துக்கு பிக்பாஸ் அட்வைஸ்

இதன்மூலம் பிக்பாஸ் ஆறாவது சீசனின் முதல் கேப்டனாக மாறிய பிறகு ஜி.பி. முத்துவை போட்டியாளர்கள் தலைவர், தலைவரே என அழைத்து பாடாய் படுத்தி எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் ஜிபி முத்துவே சில சமயம் மைக் மாட்டாமல் பேசுகிறார். இதையெல்லாம் கவனித்த பிக்பாஸ்,  “ஜிபி முத்து.. நீங்க இந்த வீட்டில நடக்குற தவறுகளை தட்டிக்கேக்குற பொறுப்புல இருக்கீங்க.. அனைவரும் உங்களை  தலைவரே தலைவரே என்கிறார்கள். ஆனால் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அல்லவா நீங்கள் இருக்க வேண்டும். காலையில் நீங்கள் கிளம்பி வர லேட் ஆகிறது என ஹவுஸ்மேட்ஸ், ‘தலைவர்னா லேட்டா தான் வருவார்’ என்கின்றனர்.

Bigg Boss Advise to GP Muthu ஜிபி முத்துக்கு பிக்பாஸ் அட்வைஸ்

இதை பார்ப்பவர்கள், தலைவர் என்றால் இதுதான் இலக்கணம் என புரிந்துகொள்ள மாட்டார்களா? எனவே நீங்கள் இந்த வீட்டில்  பொறுப்புடன் இருந்தும் தவறு செய்பவர்களை பேசி திருத்த வேண்டும். நீங்கள் விரும்பும் தண்டனைகளை கொடுக்கலாம். பகலில் தூங்கினால் எழுப்ப வேண்டும்..” என்று அட்வைஸ் பண்ணுகிறார். இதையெல்லாம் கேட்டு நரம்பு புடைக்க எழுந்த ஜிபி முத்து, இனி நான் சரியாக இருக்கிறேன் பிக்பாஸ், “இனி நான் யாரையும் தூங்க விட மாட்டேன்.. பாத்துக்கிடுங்க” என தன் ஸ்டைலில் தலைவர்ர் வேலையை ஸ்டார்ட் செய்கிறார்.

Also Read | "மைண்ட் வாய்ஸ்னு நெனைச்சு சத்தமா பேசிய Bigg Boss.?" - இத நோட் பண்ணீங்களா.. செம கலகலப்பு.. !!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Advise to GP Muthu ஜிபி முத்துக்கு பிக்பாஸ் அட்வைஸ்

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.