இயக்குநர் கௌதம் மேனனின் அடுத்த அதிரடி: டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 07, 2019 07:59 PM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமீபத்தில வெளியான டிரெய்லரும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்நிலையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பிரசாத் முருகேஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து வெப் சீரீஸ் ஒன்றை எம்எக்ஸ் பிளேயருக்காக இயக்கவுள்ளனர். குயின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.