www.garudabazaar.com

ரன்பீர் கபூருடன் செம்ம டான்ஸ் ஆடிய DD.. அப்பறம் செஞ்சது தான் ஹைலைட்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்ய தர்ஷினி ரன்பீர் கபூருடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anchor DD Dhivadarshini Dancing with Ranbir Kapoor

Also Read | கமல்ஹாசன் நடித்த விக்ரம்.. அணுஅணுவாக பாராட்டி விமர்சனம் செய்த அல்போன்ஸ் புத்திரன்!

விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என சுருக்கமாக அழைக்கப்படுபவர். இவரின் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை.

கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் பங்குபெற்ற விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

மேலும் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டையும், தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருந்தார்.

Anchor DD Dhivadarshini Dancing with Ranbir Kapoor

திவ்ய தர்ஷினி, ஏற்கனவே விசில், பா. பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ள டிடி தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சுந்த சி இயக்கும் காஃபி வித் காதல் படத்திலும் திவ்ய தர்ஷினி நடித்துள்ளார். இந்த காஃபி வித் காதல் திரைப்படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கிறது. யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா ஐயர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் திவ்ய தர்ஷினி ரன்பீர் கபூருடன் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது. 

Anchor DD Dhivadarshini Dancing with Ranbir Kapoor

ரன்பீர் கபூர் நடிக்கும் ஷம்ஷேரா திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில்  ரிலீஸ் ஆக உள்ளது. இதனை முன்னிட்டு நடந்த ப்ரோமோஷன் நிகழ்வுகளில் டிடி ரன்பீருடன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த ப்ரோமோஷன் நிகழ்வு வீடியோக்கள் & புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரன்பீருடன் டிடி நடனம் ஆடிய பின்னர் சண்டைக்காட்சிக்கு தயாராகாமல் ரன்பீர் கபூரை வெறுப்பேற்றும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஷாம்ஷேரா, ஒரு பீரியட் ஆக்‌ஷன் டிராமா படமாக உருவாக்கப்பட்டுள்ளது, இதில் ரன்பீர் இரட்டை வேடத்தில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அசுதோஷ் ராணா, சௌரப் சுக்லா, ரோனித் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Anchor DD Dhivadarshini Dancing with Ranbir Kapoor

ஷாம்ஷேராவின் கதை கற்பனையான நகரமான காசாவில் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது,

கொள்ளையர்கள் மற்றும் காவல்துறையினரின் மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது.  இந்த படத்தில் சஞ்சய் தத் ஒரு ஊழல் மிகுந்த மிருகத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரை எதிர்கொள்ளும் ஒரு கொள்ளையனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

தரோகா ஷுத் சிங் எனும் ரோலில் சஞ்சய் தத் நடிக்கிறார். ஷம்ஷேரா எனும் டைட்டில் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். சோனா எனும் கதாபாத்திரத்தில் வாணிகபூர் நடித்துள்ளார்.

Also Read | சரவணன் நடிக்கும் "The Legend".. கேரள வினியோக உரிமையை கைப்பற்றிய 'பீஸ்ட்' வினியோகஸ்தர்!

தொடர்புடைய இணைப்புகள்

Anchor DD Dhivadarshini Dancing with Ranbir Kapoor

People looking for online information on Anchor DD, Anchor Dhivadarshini, Ranbir Kapoor will find this news story useful.