‘கண்ணான கண்ணே..’ சென்சேஷன் சிங்கர் திருமூர்த்தி பாடிய முதல் திரைப்பட பாடல்..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 02, 2019 03:16 PM
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் விஸ்வாசம். தந்தை மகள் பாசத்தை பேசிய இந்த படத்தில் இடம் பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் மிகவும் பிரபலம்.

இந்த பாடலை பார்வை மற்றுத்திறனாளி இளைஞரான திருமூர்த்தி பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த பாடலை கேட்ட இசையமைப்பாளர் இமான் திருமூர்த்திக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்பு அளிக்கவிருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் வேல்ஸ் இன்டர்நெஷனல் நிறுவன தயாரிப்பில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் சீறு திரைப்படத்தின் "செவ்வந்தியே" எனும் பாடலை, திருமூர்த்தி பாடியுள்ளார் தற்போது அந்த பாடல் இனையத்தில் வெளியாகி உள்ளது.
‘கண்ணான கண்ணே..’ சென்சேஷன் சிங்கர் திருமூர்த்தி பாடிய முதல் திரைப்பட பாடல்..! வீடியோ
Tags : D Imman, Jiiva, Vels Film International, Thirumoorthy, Seeru