www.garudabazaar.com

சிம்புவின் Multi-Starrer திரைப்படம் மீண்டும் Start ஆகிறது... சூப்பர் ஹிட் இயக்குநர் வருகிறார்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் படத்தை பற்றி பிரத்யேக தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

மீண்டும் துவங்கும் சிம்பு படம் | simbu gautham karthick mufti movie remake begins with this popular director

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. 

மீண்டும் துவங்கும் சிம்பு படம் | simbu gautham karthick mufti movie remake begins with this popular director

இந்நிலையில் அடுத்ததாக சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மஃப்டி. இத்திரைப்படம் தமிழில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டது. 

மீண்டும் துவங்கும் சிம்பு படம் | simbu gautham karthick mufti movie remake begins with this popular director

இதை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. 2021 பிப்ரவரி மாதம் முதல் ஷுட்டிங் தொடங்கவுள்ளது. முன்பு படத்தின் இயக்குநரான நரதன் விலகிவிட்டதால், தற்போது இயக்குநராக சில்லுன்னு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார். 

மீண்டும் துவங்கும் சிம்பு படம் | simbu gautham karthick mufti movie remake begins with this popular director

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஈஸ்வரன், மாநாடு திரைப்படங்களை தொடர்ந்து, மஃப்டி ரீமேக்கை உடனடியாக முடிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகர் சிலம்பரசன். 

 

தொடர்புடைய இணைப்புகள்

மீண்டும் துவங்கும் சிம்பு படம் | simbu gautham karthick mufti movie remake begins with this popular director

People looking for online information on Gautham Karthik, Maanaadu, Mufti Remake, Simbu, Str will find this news story useful.