www.garudabazaar.com

மெயின் 'பில்லரே' அவங்க தான்... வெளில அனுப்புனா 'ஆட்டம்' மொத்தமா மாறிடும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று வழக்கம்போல நாமினேஷன் நடைபெற்றது. வழக்கம்போல பிக்பாஸ் நாமினேஷன் ஆனதற்கான காரணங்களை போட்டுடைத்து மேலும் கொஞ்சம் தன் பங்குக்கு எண்ணெய் ஊற்றினார். அவர் காரணங்களை சொல்லும்போது கேமரா சரியாக அவர்களின் முகங்களை காட்டியதால், நமக்கும் தெளிவாக புரிந்தது.

'Please Send out Her' Netizens requested to Bigg Boss

இந்த நிலையில் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்ற நிஷாவை வெளியே அனுப்பினால் பிக்பாஸ் ஆட்டம் வேறுவிதமாக மாறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அன்பு இன்ஸ்டிடியூட் டெக்னலாஜியின் முக்கிய புள்ளியே நிஷா தான் என்றும் அவரை அனுப்பினால், அர்ச்சனா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி விடுவார் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஆரி, அனிதா, சனம், ரம்யா பாண்டியன் ஆகிய நால்வர் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் தங்களுடைய ஆட்டத்தை ஆடுகின்றனர். ஆனால் நிஷா, ஷிவானி, ஆஜீத் ஆகிய மூவரும் பிறரை மட்டுமே ஆதரிக்கின்றனர் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இதனால் ஆஜீத் அல்லது நிஷா இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

'Please Send out Her' Netizens requested to Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.