www.garudabazaar.com

முதல்முறையாக குழந்தையின் முகத்தை காட்டிய நடிகர்.. அப்படியே அப்பா ஜாடை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நகுல். இவர் நடித்த பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகை தேவயானியின் தம்பி என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன், பின்னணி பாடகராகவும், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

popular actor shows his babys face குழந்தையின் முகத்தை காட்டிய நடிகர்

இவர் 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கூட இந்த தம்பதியரின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் அவர் இதுவரை குழந்தையின் முகத்தை காட்ட வில்லை. இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையுடன் எடுத்து அழகிய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்க்கு தனது அப்பாவை போலவே கியூட்டாக சிரிக்கிறார் அவரது மகள் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Nakul

popular actor shows his babys face குழந்தையின் முகத்தை காட்டிய நடிகர்

People looking for online information on Nakul will find this news story useful.