www.garudabazaar.com

பேரனுடன் அமெரிக்காவில் T. ராஜேந்தர்.. கூட யார் இருக்கானு பாருங்க.. இணையத்தை கலக்கும் LATEST போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் T ராஜேந்தரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Silambarasan TR T Rajendar Latest image went viral on social media

Also Read | வந்தியத் தேவனாக நடிகர் கார்த்தி.. பொன்னியின் செல்வன் படத்தின் CLASSIC கேரக்டர் லுக் போஸ்டர்!

T. ராஜேந்தர் கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குனர். நடிகர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர் மற்றும் வசனகர்த்தா, பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். 1980 களில், அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை.

டி.ராஜேந்தர் கடந்த மாதம் சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

Silambarasan TR T Rajendar Latest image went viral on social media

இதையடுத்து அவரது மகன் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில்  சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காவும், இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார்.

கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதையடுத்து  T ராஜேந்தர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சைக்காக லண்டன்  சென்றார்.

Silambarasan TR T Rajendar Latest image went viral on social media

சிகிச்சை முடிந்து தற்போது நியூயார்க் நகரில் டி. ராஜேந்தர் உள்ளார். அவரை நடிகர்கள் நெப்போலியன் & பாண்டியராஜன் நேரில் சென்று சந்தித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியானது. இந்நிலையில் டி. ராஜேந்தர் தனது மகன்கள் குறளரசன், சிலம்பரசன் & மகள் வழிப்பேரன் ஜேசன் அபியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read | மிகப்பெரிய மாஸ் சாதனை படைத்த தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. பின்னணி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR T Rajendar Latest image went viral on social media

People looking for online information on Silambarasan, Silambarasan TR, T Rajendar, T Rajendar Latest image will find this news story useful.