ET Others
www.garudabazaar.com

VIDEO: மீண்டும் நெல்சன் இயக்கத்தில் சிம்பு? பிரபல தயாரிப்பாளர் கொடுத்த செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சிம்புவை வைத்து மீண்டும் படம் எடுக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.  

Nelson Dhilipkumar and Silambarasan TR Vettai Mannan Update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். நெல்சன் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nelson Dhilipkumar and Silambarasan TR Vettai Mannan Update

இதே போல் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டது.இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

VTK படத்தை அடுத்து பத்து தல படத்திலும், கொரோனா குமார் படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L இணைந்துள்ளார். இதை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்றி இருந்தார்.

Nelson Dhilipkumar and Silambarasan TR Vettai Mannan Update

இந்நிலையில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, சிம்புவை வைத்து நெல்சன் முதன் முதலில் இயக்கிய வேட்டை மன்னன் படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக நமது Behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நெல்சனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், வேட்டை மன்னன் படத்தை துவங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸில் போலிசாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு வீடியோ பேட்டியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VIDEO: மீண்டும் நெல்சன் இயக்கத்தில் சிம்பு? பிரபல தயாரிப்பாளர் கொடுத்த செம அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nelson Dhilipkumar and Silambarasan TR Vettai Mannan Update

People looking for online information on Nelson, Silambarasan TR, Simbhu, Str, Vettai Mannan will find this news story useful.