777 Charlie Trailer

சிகிச்சைக்காக இன்று அமெரிக்கப் பயணம்….Airport-ல் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் TR

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் த டி ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்ல உள்ளார்.

T Rajendar will fly to America press meet today

பல்துறை வித்தகர் T ராஜேந்தர்..

தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான T. ராஜேந்தர் வெற்றிகரமான இயக்குனர். நடிகர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர் மற்றும் வசனகர்த்தா, பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். 1980 களில், அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. பெரும்பாலும் அவரது படங்களில் அவரே கதாநாயகனாக நடித்தார். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர்கள் பலர் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்துள்ளனர். நடிகைகள் அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உள்ளிட்டோரை அவர்தான் தனது படங்களில் அறிமுகப்படுத்தினா. இன்று தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக இருக்கும் அவரின் மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.

T Rajendar will fly to America press meet today

மருத்துவமனையில் அனுமதி…

இந்நிலையில் டி.ராஜேந்தர் சில நாட்களுக்கு முன்னதாக சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் நேற்று வெளியாகின. கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக  போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகின.

சிம்பு வெளியிட்ட அறிக்கை…

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு அவரது மகன் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில்  சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காவும், இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார்.கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் டி ராஜேந்தர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.

T Rajendar will fly to America press meet today

இன்று அமெரிக்க பயணம்…

இதையடுத்து இன்று T ராஜேந்தர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் மாலை 5.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை ஏற்பாடுகளை மேற்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நடிகர் சிம்பு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

T Rajendar will fly to America press meet today

People looking for online information on America, Health issue, Simbu, Treatment will find this news story useful.